சிறப்புற இடம்பெற்று வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று சிறப்புற இடம்பெற்று வருகிறது.

இன்று அதிகாலை முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து அதிகாலை 3 மணியளிவல் மடப்பண்டம்  எடுத்து வரப்பட்டு . வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தை காலை ஐந்து மணிக்கு மடப்பண்டம் வந்தடைந்தது . அதன்பின்னர் ஆலய பூசகர்கள் கச்சிநேரும் நிகழ்வு நடைபெற்று . அதன்பின்னர் பூசைக்குரிய தூளி பிடிக்கும் நிகழ்வு நடைபெற்று . அதன்பிற்பாடு காலை ஏழு மணியில் இருந்து ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று வருகின்றன

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து தமது நேர்த்திக்கடன்களை செய்துவருகின்றனர் .