தந்திரமாக மக்களை வெளியேற்றிவிட்டு வீதியை பூட்டிய இராணுவம்..! கேப்பாப்புலவில் அவலம்

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்றுக்காலை 7மணி முதல் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புதுக்குடியிருப்பு வற்றாப்பளை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளை தலைமையக வாயில்  மக்கள் போக்குவரத்திற்க்காக திறந்து வைக்கப்பட்டது.

பாதைதிறக்கப்பட்டதும் முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளை தலைமையகம் முன்பாக நேற்று 103வது நாளாகவும் தமது சொந்த நிலத்தை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் குறித்த பிரதான வீதியில் அமையப்பெற்று இருக்கும் தமது பூர்வீக ஆலையத்தில் சென்று வழிபாடுகளை மேற்க்கொண்டனர்.
இவர்களோடு சம உரிமை இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சியினைச்சேர்ந்த பெளத்த மதகுரு உள்ளிட்ட சுமார் 20 பேர் அடங்கிய குழுவும் சென்றிருந்தது இதனை கண்காணித்த இராணுவத்தினர் பொலிஸாரூடாக இவர்களை வெளியேற்ற முற்ப்பட்ட வேளையில் தமது ஆலயத்தில் வழிபடுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக மக்கள் தெரிவித்து தமது முருகன் ஆலய முன்றலில் ஒன்றுகூடியிருந்தனர்.
இந்த நிலையில் மக்களையும் குறித்த இரண்டு கட்சியினரும் வெளியேறுமாறு கோரி இராணுவத்தினர் பிரதான வாயில் இரண்டையும் மீண்டும் மூடிக்கொண்டனர். குறித்த குழப்ப நிலையில் குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்களுக்கும் தடைவிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.
சுமார் இரண்டு மணித்தியாலம் மக்களின் கடுமையான போராட்டம் தொடர்ந்த நிலையில் அந்த பகுதிக்கு விரைந்த மாவட்ட அரசாங்க அதிபரும் இராணுவம் , பொலிஸாரும் இணைந்து மக்களையும் குறித்த இரண்டு கட்சியினரும் வெளியேறுமாறும் வெளியேறிய பின்னர் வீதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது
ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி குறித்த பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் மக்கள் முன்னிலையில் சிறிது நேரத்தில் குறித்த வீதி ஏற்கனவே திறந்து விட்ட போன்று திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார் இருப்பினும் இதுவரை வீதியானது திறந்துவிடப்படவில்லை.
இதனால் பக்தர்கள் சுமார் 3 கிலோமீற்றர்கள் நடைபவனியாக வரவேண்டிய னநிலை ஏற்ப்பட்டது அத்தோடு இராணுவமும் அரசாங்க அதிபரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்