கணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்?

(வேதாந்தி- Vethanthi))
தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட புதிய சதொச கிளையின் திறப்பு விழா நிகழ்வு சனிக்கிழமை(10) இடம்பெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பினைப் போன்று காலத்துக்கு காலம் வருகைதந்து வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் உள்ள ஆசனங்களுக்கு சூடுகொடுக்க வந்த அரசியல்வாதி நானல்ல. எந்த அரசாங்கம் வருகின்றதோ அந்த அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுப்பதனையே நோக்காக கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை இன்னும் இன அரசியலைபேசி ஏமாற்ற முடியாது. கிழக்கு மாகாணத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து மாகாணசபையை அமைக்கப்போகின்றோம் என்றார்.

இது நேற்று  வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற நிகழ்வில் சோமசுந்தரம் கணேசமூர்த்தியினால்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்குவிடுக்கப்பட்ட சவாலாகும்.
இது சம்பந்தமான செய்தி எமது சுபீட்சம் தளத்தில் வெளியிட்டபோது அதற்கு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது முகப்புத்தகத்தில் வழங்கிய பதில் இதோ
வரட்டும் தேர்தல் பார்ப்பம் ஏற்கனவே கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு கிழக்கை தாரைவார்த்து கொடுத்துள்ளது இப்ப இவர் ஏன் இவரின வாக்கில் வந்த அமிரலி ஏதாவது ஒரு வேலை பட்டிருப்பில் செய்து இருக்கின்றாரா பட்டிருப்பான் மடையன் அல்ல என்பதை இவனுகளுக்கு உணர்த்த வேண்டும்.
மேற்படி கணேசமூர்த்தியின் கூற்றின் மூலம் சில விடயங்கள் புலனாகின்றது.
1.கணேசமூர்த்தி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.
2.ஐக்கிய தேசிய கட்சியும் ரிசாத் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிடப்போடுகின்றது.
3.மட்டக்களப்பில் யானைச்சின்னத்தில் 3முஸ்லிம்களும் 11தமிழர்களும் போட்டியிடப்போகின்றார்கள்.
4.முஸ்லிம் வேட்பாளர்கள் கல்குடாவுக்கு ஒருவர், ஏறாவூருக்கு ஒருவர், காத்தான்குடிக்கு ஒருவர் என  நிறுத்தி விருப்பு வாக்குகளை மூன்று பேருக்கும் போடுவது

கருணா அம்மானின் பதில் இவ்வாண்டுகிழக்கு மாகாணத்தை முஸ்லிம்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க தமிழர்கள் தயார் இல்லை என்பதையே புலப்படுத்துகின்றது.

பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியகட்சி அமைப்பாளரான சோ.கணேசமூர்த்தி அவர்கள் கூறிய கருத்தும் சவாலும் தான் ஒரு கட்சி அமைப்பாளராக அன்றி அமைச்சர் ரிசாட் பதியுதினின் விசுவாசியாகவும்,பிரதி அமைச்சர் அமீர் அலியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்து கொண்டே இக்கருத்தை துன் வைத்துள்ளார் என கருதமுடியும்
.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து  தமிழ் தேசிய கூட்மைப்பு ஆட்சியமைத்ததை தமிழ் மக்கள் விமர்சித்து வருகின்ற வேளையிலும்,அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது சமுகம் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும்,அபிவிருத்தியில் தமிழர் பிரதேசங்களை புறக்கணிப்பது,நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது, ஆசிரியர் இடமாற்றங்களில்  தமிழர் பிரதேசங்களை புறந்தள்ளுவது, தொழிற்சாலைகளை முஸ்லிம் பிரதேசங்களில் அமைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழர்கள் வேதனைப்பட்டு கொடுத்த சந்தர்ப்பம் போதும் இனிமேலும் முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு ஆட்சியமைப்பது சாத்தியமில்லை இப்படியான கட்சிகளை நாம் புறக்கணிப்போம் என தமிழ் மக்கள் கூறி வருகின்ற வேளையில்  அமைச்சர் ரிசாட் பதியுதின் தமைமையிலான கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் எனக்கூறியுள்ளமை கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று அமிர்அலியை நாடாளுமன்றம் அனுப்பியதுபோல் மாகாணசபைத் தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு மூன்று முஸ்லிம் சகோதரர்களை மாகாணசபைக்கு கணேசமூர்த்தி அனுப்பப் போகின்றாரோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.

புட்டிருப்புத்தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோம் என ஏன் கணேசமூர்த்த சொன்னார் என்ற வியடத்தை நோக்கினால் தான் பட்டீருப்புத்தொகுதியைச்சேர்ந்தவன் தனக்கு களுதாவளைக்கிராமத்தின் வாக்கு வங்கி உண்டு, தன்னுடைய சாதியை சேர்ந்தவர்கள் இம்முறை தனக்கு வாக்களிப்பாளர்கள், தமிழ் தேசியகூட்டமைப்பு பட்டிருப்புத்தொகுதியில் புதியமுகங்களை இம்முறை தேர்தலில் நிறுத்தாது,பழைய முகங்களை நிறுத்தினால் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும், எருவில் மகிளுர், களுதாவளை போன்ற கிராமங்களிலிருந்து  வேட்பாளர்கள் நிறுத்தப்படாவிட்டால் அது தனக்கு சாதகமாக தோன்றும்.
ஆத்துடன்பட்டிருப்புத்தொகுதி சார்ந்த கூட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் மத்தில் உள்ள அதிருப்திபோன்ற காரணங்களை முன் வைத்து கணேசமூர்த்தி கூட்டமைப்புக்கு  சவால் விடுத்திருக்கலாம்.இச்சவால்அமைச்சர் ரிசாட் பதியுதினின் விசுவாசியாக இருந்து விட்டாரா அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக இருந்து விட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்பதுடன் இச்சவாலை தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு கையாளப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிப்பட்டவர்களின் நலனுக்காக அரசியல் செய்யப்போகின்றதா மக்களின் நலனுக்காக அரசியல் செய்யப் போகின்றதா என்பதை யோசிக்க வேண்டும். கணேமூர்த்தியின் சவாலை கவனத்தில் எடுத்து பட்டிருப்புத்தொகுதியல் மாத்திரமல்ல முழுகிழக்கு மாகாணத்திலும் கூட்டமைப்பு தங்களை தமிழ் மக்களின் நலன்கருதி  சுயவிமர்சனம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.