சிறுபோக செய்கைக்கான உர மானியம் வழங்கப்படவில்லையென விவசாயிகள் கவலை தெரிவிப்பு

(படுவான் பாலகன்) சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் அறுவடைக்கு ஒரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் அரசினால் வழங்கப்படும் உரமானியத்திற்கான கொடுப்பனவுகள் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு, வேளாண்மை வளர்ந்து உரம் இடுவதற்கான காலப்பகுதியும் கடந்து சென்றுள்ளதாகவும் இதுவரை மானியத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லையெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கடன்களைப்பெற்று விவசாய செய்கையை மேற்கொள்ளுகின்றபோதிலும், உரிய காலப்பகுதிக்குள் உரம் இடாததினால் சிறந்தவிளைச்சலை பெறமுடியாத நிலையேற்படும் எனவும் கூறுகின்றனர். மேலும் தமக்கான உர மானிய கொடுப்பனவினை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.