கொக்கட்டிச்சோலையில் இலங்கையில் 378வது லங்கா சத்தோச கிளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சத்தோச கிளை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன், எஸ்.கலீல், எஸ்.கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி.எஸ்.மீனா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கொக்கட்டிச்சோலையில் திறந்து வைத்த லங்கா சத்தோச இலங்கையில் 378வது கிளை என்பது குறிப்பிடத்தக்கது.