புதுக்குடியிருப்பு மக்களுக்கு இடமளிக்காத அரச அதிகாரிகள் ! மக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கான புதிய கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..

இவ் நிகழ்வில் அங்கு வருகைதந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பலருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் அப் பிரதேசத்தை சேர்ந்த பொதுமகன் ஒருவருக்குக்கூட அவர்களுடைய கருத்துக்களை கூறுவதற்கு  அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக இச் சந்தை கட்டட தொகுதிக்கான மிக பெறுமதியான காணியை பொதுமக்கள் இலவசமாக கொடுத்திருந்தனர் இவர்களுக்கு கூட   உரிய கௌரவம்  குறித்த நிகழ்வில் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேசசபை செயலாளர் ,முல்லைமாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் பொது மக்கள் ஒருவருக்காவது உரையாற்ற சந்தர்ப்பம் வழங்க கோரிகை விடுத்தும் அது குறிப்பிட்ட அரச அதிகாரிகளால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகிறது

.இந் நிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வர்த்தகர்கள் கவலையோடு நிகழ்வில் இருந்து வெளியேறியமையை அவதானிக்க முடிந்தது.