200 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், விசேட வேலைத்திட்டங்களுக்காக, 200 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவிக்கையில், கணக்காளர்கள், வங்கி நடவடிக்கை மற்றும் பொறியல் பிரிவு ஆகிவற்றுக்கு இவர்கள் இணைத்துகொள்ளப்பட உள்ளனர்.

எனினும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணைகளை தற்போது, பொலிஸாரே மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால், விசேட திறமை கொண்டவர்களை அந்த துறையில் இணைத்துகொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இல்லாமற் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.