பல்வேறு துறைசார்ந்த மூவாயிரத்து 500 கலைஞர்கள் வருடாந்த கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார்.
கலைஞர்களுக்கான வருடாந்த கொடுப்பனவை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை காலமிருந்த ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது