பட்டிப்பளை, வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் இலவச சட்ட ஆலோசனை

(படுவான் பாலகன்) பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை நாளை(10) சனிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரணையில் இலங்கை சட்டக்கல்லூரி இந்து மகாசபை சட்டச்சபையினால் இச்சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள், வீட்டு வன்முறை, போதைப்பொருளுக்கு அடிமையாதல், சிறுவர்கள் பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகங்கள், காணி தொடர்பான பிணக்குகள், கடன் நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகள் இதில் வழங்கப்பட்டவுள்ளன.


பட்டிப்பளைப் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை, கடுக்காமுனை, கச்சக்கொடி போன்ற இடங்களிலும், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கணேசபுரம், பாலையடிவட்டை, திக்கோடை போன்ற இடங்களிலும் இச்சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.