சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரீனி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் தொடர்பான முறைபாடுகளை தமக்கு அறிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக 1929 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ இந்தத் தகவல்களை அறிவிக்கலாம். கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகளும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று திருமதி லிவேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.