மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மாணவன் விபத்தில் மரணம்

கல்முனை அம்பாறை பிரதானவீதி சம்மாந்துறையில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17வயது மாணவனும் அவருடைய  நண்பனும் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி பாடசாலை மாணவன் மரணமடைந்துள்ளார்..
மரணமடைந்தவர் சம்மாந்துறையைச்சேர்ந்த அப்துல்சலாம் சப்றாத்(17) என தெரிவிக்கபடுகின்றது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது குறித்த மாணவன் சகநண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் வைக்கிள் வீதியோரத்தில் காணப்பட்ட தூனுடன் மோதி பலத்தகாயங்களுக்கு உள்ளான நிலையில் சம்மாந்துறை  ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றி இன்று(வியாழன்) காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடிர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.பிரேதபரிசோதனையை சட்டவைத்திய அதிகாரி  B.K.Iரொட்றிக்கோ மேற்கொண்டார்.தலையில் பலமாக அடிபட்டதனால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடலம் இன்று வியாழன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை  மரணமடைந்த மாணவனின் நண்பன் தற்போதும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகச்சை பெற்று வருகின்றார்.
மரணமடைந்தவரின் தந்தையார் தற்போது தொழில் நிமித்தமாக மத்தியகிழக்கு நாடொன்றில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.