மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பூசகரும், மாணவனும் மட்டக்களப்பில் தற்கொலை.

மனஅழுத்தம் காரணமாக மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் இருமரணங்கள் நேற்றுஇடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சிவானந்தாவித்தியாலயத்தில் கணிதப்பிரிவில் பயிலும் மாணவன் கருணாகரன் பவநுசன் மனஅழுத்தம்காரணமாக கல்லமப்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
மற்றொரு சம்பவம் மகிளுர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.மகிளுர் கருணைவிநாயகர் ஆலய பூசகர் வீரக்குட்டி தங்கரூபன்(61) தற்கொலை செய்துள்ளார்.இவருடைய தற்கொலைக்கும் காரணம் மன அழுத்தமே என  விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது..
இவருடைய சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பிரதபரிசோதனையின் பின்னர் நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக போதனாவைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடிர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றபோது மனைவியான திருமதி அருளம்மா தங்கரூபன்,மகன் தங்கரூபன் நிமலன் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.
இதேவேளை சிவானந்தாவித்தியாலயத்தில் கல்விபயின்ற அம்பிளாந்துறையைச்சேர்ந்த மாணவன் பவநுசன் ஆரம்பத்தில் வர்த்தகத்துறையை தேர்ந்தெடுக்கவே விரும்பியதாகவும் கட்டாயத்தின் பேரிலே விருப்பம் இல்லாமல் கணிதத்துரையை தேர்ந்தெடுத்து விருப்பமின்றியே கல்வி பயின்று வந்ததுடன், மிகவும் அமைதியான சுபாவம் உடைய இம்மாணவன் சக மாணவர்களுடன் பழுகுவது மிகவும் குறைவு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் மீது விதிக்கப்பட்ட சில இறுக்கமான கட்டுப்பாடுகள் மன அழுத்ததுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.