குருக்களின் வீட்டில் கொள்ளை

களுவாஞ்சிகுடியில் குருக்கள் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு நகையும்,பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி சுப்பிரமணியம் குருக்கள் வீதியில் அமைத்துள்ளவீட்டிலையே மேற்படி கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை (07) இடம்பெற்ற இக்கொள்ளை சம்பவம் தொடர்பாகமேலும் தெரிய வருவதாவது.

களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின்முன்னிட்டு வீட்டில் உள்ள அனைவரும் ஆலயத்திற்கு சென்றவேளையிலையே   குறித்த கொள்ளையை கொள்ளையர்கள்மேற்கொண்டுள்ளனர்.

வீட்டின் பின்கதவினைஉடைத்து சுவாமி அறையினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த அலுமாரியை உடைத்து அதற்குள் இருந்த75000 ரூபாய் பணமும், 12 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக வீட்டுஉரிமையாளர்  தெரிவித்தார்.