கொக்கட்டிச்சோலையில் பச்சைக் கட்டு திருச்சடங்கு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பச்சைக் கட்டுத் திருச்சடங்கு இன்று(08) வியாழக்கிழமை இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை வேட வேளாளர் குடி மக்களினால் நடாத்தப்பட்ட பச்சைகட்டு சடங்கிற்கான, பூசைப்பொருட்கள் மற்றும் பாற்குடங்கள் என்பன கொக்கட்டிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டன.

பாரம்பரிய கலைகள் மற்றும் மிருக பாவனை ஆடல்களுடன் பூசைப்பொருட்கள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டன.