கல்லடி பாலத்தின் வாவியில் குதித்தவர் சடலமாக மீட்பு – இறுதிக்கிரியை இன்று

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் வாவியில் நேற்று(07) குதித்தாக கூறிய மாணவன் அவ்வாவியிலிருந்து இன்று(08) வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பிளாந்துறை கிராமத்தினைச் சேர்ந்த கருணாகரன் பவானுஜன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவன், கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பிரிவின் கணிதப்பிரிவில் கல்வி கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவனின் இறுதிக்கிரியைகள் அம்பிளாந்துறையில் உள்ள, அவரது வீட்டில் இன்று பிற்பகல் 4.30மணிக்கு நடைபெற்று, அங்குள்ள மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.