அரச சேவை ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 45ஆக அதிகரிக்க மறுப்பு

வடக்கு மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க மறுத்து விட்ட பொது நிர்வாக  மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துகம பண்டார 21 – 35 என்ற  வயதெல்லையில் எந்த மாற்றமும் செய்ய முடியாதெனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் கேள்விக்குப் பதிலளிக்கும்  போதே அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்தார்.