தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்புக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்புக்கு இசைக்கருவிகள் கடந்த சனிக்கிழமை(3) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக இந்து சமய கலாச்சார உத்தியோகஸ்தர் எஸ்.குணநாயகம் கிராம சேவை உத்தியோகஸ்தர் ரி.தியதீஸ்வரன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஆலய பரிபாலன சபை தலைவர் நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.