“நல்லிணக்கம்” என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் புதிய கற்கை நெறி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கம் மற்றும் பல்ககைகழக மானியங்கள் ஆணைக்குழு உயர்கல்வி ஊடாக தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களில் இந்த புதிய கற்கை நெறி சேர்த்துக்கொள்ளப்படுவதற்கான உடன்படிக்கை தற்பொழுது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழப்பாணம், றுகுணு ,தென்கிழக்கு நுண்கலை, கிழக்கு பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த கல்லூரி ,இலங்கை பௌத்த கல்லூரி மற்றும் யாமியாநலுமியா உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு இந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கற்கை நெறியை தொடரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.