இன்னும் எத்தனை மொட்டுக்கள் உதிருமோ? காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? காமுகர்களை மீளாச்சிறையில் அடையுங்கள்

இன்று காரைதீவில் கண்டனப்பேரணியும் ஆர்ப்பாட்டமும்

(சகா)
 
இளந்தளிர்ளைக்கிள்ளும் காமவெறியாளர்களை வெட்டிவீழ்த்துவோம். காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? பெண்களின் வாழ்வுக்கு யார் பொறுப்பு ? சட்டமா சமுகமா? பெண்கள் மீது வன்முறை செய்பவர்களை  மீளாச்சிறையில் தள்ளு – நாளைய தலைவர்கள் இன்றைய கயவர்களின் காமப்பசிக்கா? யார் பாதுகாப்பு? 
 
இவ்வாறான சுலோகங்களடங்கிய பதாதைகளோடு பாரிய கண்டனப்பேரணியும் ஆர்ப்பாட்டமும்இன்று(5) திங்கட்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
 
மூதூர் மல்லிகைத்தீவு மூன்று பெண்சிறார்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டமையைக்கண்டித்து காரைதீவு 12ஆம் பிரிவிலுள்ள கலைமகள் முன்பள்ளி சிறார்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சமுகஆர்வலர்கள் அனைவரும்சேர்ந்து இந்தக் கண்டனப்பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நேற்று நடாத்தினர்.
 
முன்பள்ளி ஆசிரியை திருமதிகமலதாஸ் சகுந்தலா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் சமுகஆர்வலர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்துகொண்டு கருத்துக்களைப்கிர்ந்துகொண்டார்.
 
ஆர்ப்பாட்டத்தின்போது பெற்றோரும்சிறுவர்களும் இணைந்து உச்சக்கட்டச்சத்ததில் குரல்எழுப்பினர். சிதைக்காதே சிதைக்காதே இளம்மொட்டுக்களை சிதைக்காதே நல்லாட்சியே காமுகர்களுக்கு மீளாத்தண்டனை வழங்கு. தமிழ்ச்சிறுவர்களுக்கு பாதுகாப்பு யார்?. தமிழர்கள் என்ன கிள்ளுக்கீரையா? அரசியல்வாதிகளே காமுகர்களைக் காப்பாற்றாதே. ஏதுமறியாச்சிறுவர்களைக் காப்பாற்று. இன்று மூதூர் நாளை?  இவ்வாறு சத்தமெழுப்பினர்.
 
சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்லாட்சிஅரசாங்கம் உச்சக்கட்சி தண்டனைவழங்கி மீளாச்சிறைக்குள் தள்ளவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் சமுகஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
 
சமுகஆர்வலர் கி.ஜெயசிறில் கருத்துரைக்கையில்;
வடக்குகிழக்கு தமிழ்ச்சமுகம் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட அநீதிகளுக்கும்வன்முறைகளுக்கும் இலக்காகிவந்துள்ளது. அதனை இலகுவில் மறந்துவிடமுடியாது. 
 
அம்பாறைமாவட்டத்திலும் திராய்ககேணிப்படுகொலை வீரமுனைப்படுகொலை உடும்பன்குளப்படுகொலை இவ்வாறு அடுக்கிக்கொண்டேபோகலாம்.
 
இந்தநிலையில் மூதூhரில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான காமவெறியாட்டத்திற்குக்காரணமாணவர்களை உடனடியாகக்கைதுசெய்து மீளாச்சிறையில் தள்ளவேண்டும். அவர்களுக்காக எந்த சட்டவல்லுனரும் நீதிமன்றில் ஆஜராகக்கூடாது. 
இச்சம்பவத்தை இனரீதியாக நோக்காமல் மனித மிருகங்களைத்தண்டிக்கவேண்டும். எந்த அரசியல்வாதிகளும் இவர்களுக்கு துணைபோகக்கூடாது.
சில அமைச்சர்கள் இனஜக்கியத்தைக்குழப்பவேண்டாம் என்கின்றனர். நாம் இதனை இனரீதியாகப்பார்க்கவில்லை. காமுகர்களுக்கு அதாவது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள் என்றுதான்கேட்கின்றோம். என்றார்.
 
பெற்றோர் கருத்துரைக்கையில்:
இதனை ஒருவகையான இனஅழிப்பாகவே பார்க்கின்றோம்.நல்லாட்சிஅரசு விரைந்து நடவடிக்கைஎடுக்கவேண்டும். மூதூர் சிறார்களுக்கு நடந்தது இனி இலங்கையில் எங்கும் நடைபெறக்கூடாது. இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை எதிர்காலகாமுகர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். என்றனர்..