மருந்துகள் தெளிக்கப்படுவதால் தான் மீன்கள் உயிரிழக்கின்றன

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியின்போது  தெளிக்கப்படும் மருந்துகள் காரணமாகவே மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக குறித்த பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குகின்றன..

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்கரையில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சட்டவிரோத மீன்பிடி காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்கள் இறந்து கரையொதுங்குவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுமாத்திரமன்றி குறித்த பகுதியை ஆழப்படுத்தி தருமாறு தாம் பல தடவைகள் வலியுறுத்தியபோதும், இதுவரை அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளன