போரதீவு பகுதியில் ஒருவர் கைது : உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

(பழுகாமம் நிருபர்) தனியாருக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி கோழிக்கழிவுகளை கொட்டமுயன்றார் என்ற சந்தேகத்தில் சனிக்கிழமை இரவு ஒருவர் போரதீவு பகுதியில் வைத்து வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது கோழிக்கழிவுகளை ஏற்றி வருகைதந்த உழவு இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போரதீவு பிரதேச சபைக்குட்பட்ட தனிநபர்களின் காணிகளில் கோழிக்கழிவுகளை பிரதேச சபையின் அனுமதியின்றி இரு வெவ்வேறு இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக இனந்தெரியாதோர் கொட்டிவருவதினால் அச்சூழலில் உள்ள மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய நிலையில், பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளனர்.


குறித்த பிரதேச சபையின் செயலாளர், இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (03) இரவு கோழிக்கழிவுகளை கொட்டுவதற்காக வருகைதந்த உழவு இயந்திரத்தினை பொறுகாமம் கிராம மக்களுடன், வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.