மாவடிமுன்மாரியில் வைகுந்தம் வடமோடிக் கூத்து சட்டம் கொடுத்தல் நிகழ்வு

(படுவான் பாலகன்) மாவடிமுன்மாரி, விடுதிக்கல் கிராமத்தில் புதிதாக பழக்கப்படும் வைகுந்தம் வடமோடிக் கூத்திற்கான சட்டம் கொடுத்தல் நிகழ்வு நேற்று(04) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மாவடிமுன்மாரி, விடுதிக்கல் கிராம மக்களின் ஒழுங்கமைப்பில் குறித்த கூத்தானது பழக்கப்பட்டு வருகின்றது.
இக்கூத்திலே ஏற்கனவே கூத்துக்களில் ஆடிய அனுபவம்வாய்ந்த கலைஞர்களும், புதிய கலைஞர்களும் இதில் பாத்திரமேற்று ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, கலைஞர்களுக்கு பொருத்தமான பாத்திரங்களை அண்ணாவியார், ஓலைச்சுவடியில் எழுதி கலைஞர்களின் கைகளில் வழங்கி வைத்தார்.