ஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக வைத்து கேரளகஞ்சாவுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக வைத்து ஏழுபதாயிரம் மில்லி கிராம் கேளரா கஞ்சாவுடன் ஒருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைவஸ்து பாவனையை குறைக்கும் முகமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் விசேட போதை ஒழிப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அப்பிரிவினரால் போதையை ஒழிக்கும் முகமாக பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட விசேட தேடுதலின் போது கேளரா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஐநூறு ரூபாய் பெறுமதியான கஞ்சா பைகள் இருபத்தி மூன்றும், ஆயிரத்தி ஐநூறு ரூபாய் பெறுமதியான கஞ்சா பைகள் ஆறும் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.