தலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்.

தலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள் என்ற கருத்துப்பட என்அன்பிற்குரிய மக்களே என்ற தலைப்பில்

ஜனநாயக போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகின்றது..

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலக உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரனின் ஏற்பாட்டில் கட்சி தொடர்பான பொது மக்களுக்கு விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று 04 மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடப்பெற்றது.

இத்துண்டுப் பிரசுரமானது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் 30 வருட கால ஆயுத யுத்தத்தின் பிற்பாடு போராளிகளின் நிலை மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கி மக்கள் மத்தியில் தெளிவு படுத்துவதற்காக வினியோகிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இத்துண்டுப்பிரசுரத்தில் உள்ளடங்கிய விடயங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடைவதற்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் வினியோகிக்கப்படவுள்ளதாக கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் க.பிரபாகரன் கருத்து தெரிவித்தார்.