கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் சுரவணையடியூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டம்

U

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் நிக் அண்ட் நெல்லி அமைப்பின் நிதி உதவியின் கீழ் போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சுரவணையடியூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ப.கமல்ராஜ் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனித வளங்கள் அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஆலய நிர்வாக தலைவர் இந்து கலா மன்ற தலைவர் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

U
U
U
U
U