மட்டக்களப்பில் கட்டம் கட்டமாக குடிநீர் இணைப்புக்கள்

ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கியாக வேண்டும் என்பதே எனது இலக்காகுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

அந்த வகையில், நீர் வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் (திருD.A. பிரகாஸ்) மாவட்ட முகாமையாளர் (திரு.A.J.வசந்தராஜ்) பொறுப்பதிகாரி திரு.ஆ.விக்கினேஸ்வரன் உட்பட ஏனைய பணியாளர்கள் மேற்படி விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்..

அதே வேளை World Vision அமைப்பினர் எமது வேண்டுக்கோளுக்கு அமைவாக, நிதியுதவியினை வழங்கியிருந்தனர். அந்த வரிசையில் இன்று (04.06.2017) முறக்கொட்டாஞ்சேனை இ.கி.மி வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணரிசி வித்தியாலயம், கிரான் பாடசாலை என்பவற்றிற்கு நீர் வழங்கப்பட்டு விட்டது. எதிர்வரும் வாரத்தில் சந்திவெளி கிராமப் பாடசாலைக்கான குடிநீர் வழங்குவதற்கான செயற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே களுவன்கேணியிலுள்ள இரு பாடசாலைகட்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. இதற்கான நிதியினை farm foundation வழங்கியது என்பதை நாம் மறக்கவில்லை ‘சுத்தமான குடிநீரே சுகமான வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்.’ என்ற வகையில் எமது மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற வழி செய்ய வேண்டும்.

மேலும், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலக்காடு, கரடிப்பூவல் ஆகிய பின் தங்கிய கிராமங்களுக்குரிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் முள்ளாமுனைக் கிராமத்திற்கும் குடிநீர் இணைப்பு பூர்த்தியாகி விட்டது. இவற்றைப் விட, இன்னும் பல கிராமங்களுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீர் வழங்கலை விரைவாக செய்ய வேண்டியுள்ளது.

இவ்விடயத்தில் திரு தெய்வேந்திரன் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் திகிலிவெட்டை வாகனேரி போன்ற கிராம மக்களும் தமது கிராமங்களுக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கையினை விடுத்துள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களை உரிய உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கியுள்ளதாக ஜி.ஸ்ரீநேசன் பா.உ அவர்கள் குறிப்பிட்டார்.