முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச ஓய்வூதியர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10.24 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு அருகில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச ஓய்வூதியர் சங்க செயலாளர் திரு அ செல்வரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் கனடா வன்னித் தமிழ் சமூக கலாச்சார அமையம் பிரம்டன் தமிழ் மூத்தோர் கழக உறுப்பினர் செல்லையா செல்வக்குமாரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

முல்லைத்தீவிலுள்ள இந்த அமைப்பானது பல்வேறுபட்ட திட்டங்களோடு தமக்கான கட்டிடத்தினை அமைக்க ஆரம்பித்துள்ளதாகவும் இதற்காக  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களுடைய ஒதுக்கீட்டில்  3 இலட்சம் ரூபா நிதி தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்க்கான வேலையை இன்று ஆரம்பிப்பதாகவும்

இதனைவிட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே கே காதர் மஸ்தான் அவர்களுடைய ஒதுக்கீட்டில் 1 இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் இதனைவிட வடமாகான சபை பிரதி அவை தலைவர் திரு வ கமலேஸ்வரன் அவர்களுடைய ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் வடமாகான சபை உறுப்பினர் திரு க சிவநேசன்  அவர்களுடைய ஒதுக்கீட்டில் 1 இலட்சம் மற்றும் வடமாகான சபை உறுப்பினர் திரு ஆ புவனேஸ்வரன் அவர்களுடைய ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபா  கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  இன்னும் பலரது உதவியோடு இந்த கட்டிடத்தை அமைத்து தமது சேவைகளை தொடரவுள்ளதாக தெரிவித்தனர்