கல்குடா கல்வி வலயப் பணிப்பாளரை வரவேற்ற திகிலிவெட்டை கிராம மக்களின் நன்றி மறவாத நிகழ்வு

அண்மையில் கல்கடா கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வலயப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்ற தினகரன் ரவிக்கு திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமோக வரவேற்பு இன்று (3) சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.தவனேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்றது..

கல்குடா கல்வி வலயத்திற்கான வலயப் பணிப்பாளர் பதவிக்கான நியமனம் பெற்ற பின்னர் முதன் முதலாக வலய பணிப்பாளரின் சொந்த கிராமமான திகிலிவெட்டையில் அமைந்துள்ள தனது பாடசாலையில் இன்றைய பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

மிகவும் அதிகஸ்டப் பிரதேசமானதொரு பகுதியில் இருந்து படித்து கல்குடா கல்வி வலயத்திற்கு தனது ஊரின் பெருமகன் வலயப் பணிப்பாளராக வருகைதந்தமையினை சிறப்பித்து விரவேற்கும் முகமாக கிராமத்திலுள்ள ஆலயங்கள், பொது சமூக அமைப்புக்கள், கிராம மக்கள், பாடசாலை சமூகம் என பலரின் பாரிய வரவேற்பு கௌரவிப்பில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கல்குடா கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியை வரவேற்பு நிகழ்வில் சுமார் 50க்கு மேற்பட்ட மலர் மாலைகளை பாடசாலை அதிபர் ஆசிரியர் குலாத்தினர், பாடசாலை மாணவர்கள், ஊர் மக்கள், ஆலயத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என போன்ற பலரின் கரங்களினால்  வலயக் கல்வி பணிப்பாளருக்கு அணிவிக்கப்பட்டு பாண்ட் வார்த்தியம் முழங்க வரவேற்க்கப்பட்டு ஆலய பூசை வழிபாட்டுடன் இன்றைய நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு இந்து ஆலயத்தின் குருக்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ், கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், சந்திவெளி மற்றும் திகிலிவெட்டைப் பிரதேச பொதுமக்கள், ஆலய நிருவாகங்கள், சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளராக முதன் முதலாக தனது கிராம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளரின் பெற்றோர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவிக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்களும் வாழ்த்து மடல்களும் பாடசாலை அதிபர் மற்றும் திகிலிவெட்டை ஊர் பொது மக்களினால் வழங்கி வைக்கப்பட்டது.