திருமதி புள்ளநாயகம் மறுத்தது உண்மையா? ஏன் மறுத்தார்?

தற்போது பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களை மாகாணகல்விப்பணிப்பாளராக நியமிப்பதற்கு திருமலையில் உயர் மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அவரிடம் ஒப்புதல் கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக திருகோணமலையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இப்பதவியை ஏற்றுக்கொள்ள ஏன் மறுத்தார் என தெரியவில்லை.
தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற ஆசிரியர் நியமனம்,வளப்பங்கீடு என்பவற்றில் தற்போதைய மாகாணக்கல்விப்பணிப்பாளர் தன்னிச்சையாக இயங்குவதையடுத்தே  உயர்மட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பு- இத்தகவல் சம்பந்தமாக திருமதி புள்ளநாயகம் அவர்களின் கருத்து எமக்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் எம்மால் பிரசுரிக்கப்படும்.