கிழக்கு மாகாணத் தொண்டராசியர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில்

ஞா.ஸ்ரீநேசன். பா.உ
கிழக்குத் தொண்டராசிரியர்களின் பாராளுமன்ற, கல்வியமைச்சு சந்திப்புத் தொடர்பாக, ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துகளை முன்வைத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களின் நேர்முகப்பரீட்சை, நியமனங்கள் தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டது. இவ்விடயம் தொடர்பாகக் கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் ( ஜனாப். வஹாப், ஜனாப். அனீஸ்இ திரு.சு.னு சுரேஸ் போன்றவர்கள் ) மட்டக்களப்பிலுள்ள எனது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந் நியமனத்திலுள்ள இழுபறி நிலைகள் பற்றியும் விளக்கினார். அத்துடன் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் ஜயாவினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குறிப்பிட்டனர்..
தொண்டராசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்பந்தர் ஜயாவுடனான சந்திப்பு கடந்த  25.05.2017அன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போது கிழக்கு தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் 10 பேர் வரை கலந்து கொண்டனர். தொண்டராசிரியர் சங்கத்தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் தமது நிலைமையினை எதிர்க்கட்சித் தலைவரிடம் முறையாக விளக்கினார். இது தொடர்பான நிலைப்பாடுகளை சம்பந்தர் ஜயாவிடம் நானும் விளக்கினேன்.
உடனடியாக செயற்பட்ட சம்பந்தர் ஜயா, கல்வியமைச்ருடன் தொடர்பு கொண்டு பாராளுமன்ற வளாகத்தினுள்; சந்திப்பையும் மேற்கொண்டார். கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டியாராச்சி அவர்களும் அச்சந்திப்பில் பங்கு கொண்டார். இதன் போது எதிர்க்கட்சி தலைவர் உட்படத் வருகை தந்த தொண்டராசிரியர் சங்கம் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். இதன் போது கல்வியமைச்சர் செயலாளர் ஆகியோர் சாதகமாக பதிலளித்தனர். அதனையடுத்து 26.05.2017இல் கல்வியமைச்சில் மேலதிகக்கல்விச் செயலாளர் திரு. ஹேமந்த அவர்களுடன் நானும் தௌமீக் பாராளுமன்ற உறுப்பினர், வஹாப், அனீஸ் போன்றவர்களும் சந்தித்து கலந்துரையாடினோம்.
இதனையடுத்து கிழக்கு மாகாண சபையிலுள்ள கல்விச்செயலாளர், மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழச் செயலாளர் ஆளுனரின் செயலாளர் ஆகியோருடனான சந்திப்பு 29.05.2017 இல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் கிழக்கு மாகாணத் தொண்டராசியர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில் நடைபெற இருப்பதாக அறிய முடிகின்றது.
எனவே தொண்டராசிரியர்கள் தமக்குரிய ஆவணங்களைத் தயார் படுத்தி வெற்றிகரமாக நேர்முகப்பரீட்சையை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த இடத்தில் எமது எதிர்க்கட்சி தலைவர் மெற்கொண்ட துரித நடவடிக்கையைப் பாராட்டுகின்றேன்.