இன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும் ஜி.சிறிநேசன் பா.உ

மனித வடிவத்தில் நடமாடும் காம வெறிபிடித்த மிருகங்களுக்கு எவரும் கருணை காட்டவும் கூடாது, காப்பாற்ற முன்வரவும் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் அவர்களது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். .
காம வெறியர்களைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அவ்வாறான வெறியாட்டங்களுக்கு தீனி போடுபவர்களாகவே கணிக்கப்படுவர்கள். காமவெறியர்களுக்கு குழந்தை, சிறுவர், குமரி,; முதியோர் என்ற வேறுபாடுகள் தெரிவதில்லை .இப்படியானவர்கள் சமுக பண்பாட்டைச் சீரழிக்கின்ற படுபாவிகளாவர். பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் எந்த சமூகத்தவர்கள் என்பது எமக்கு தேவையில்லை. குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சட்டப்படி உச்சமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் பரவலாக சிறுவர் துஸ்பிரயோகங்கள், பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை கட்டு;ப்படுத்தியாக வேண்டும். அண்மையில் மூÀரில் 7வயது 8வயதுகள் கொண்ட சிறுமியர்கள் மூவர் காமவெறியர்களால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம். நல்லாட்சி, நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகின்ற இக்காலத்தில் இப்படியான துஸ்பிரயோகங்களை மனித குலத்திலுள்ள எவரும் கண்டித்தேயாவர்கள். சிறுவர்களை வஞ்சிக்கும் வெறியர்கள் யாராக இருந்தாலும் சட்டக்காவலர்கள் கருணைக்காட்டக் கூடாது. மேலும், இப்படியான செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பிள்ளைகள் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும். பண உழைப்புக்காக தாய்மார்கள் வெளிpநாடுகள் செல்வதைத் தவிர்த்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட இரு சிறும்pகளின் தாய்மார்கள் வெளிநாடுகளில் உள்ளதாக அறியமுடிகின்றது.
பொலிசார், சட்டத்தரணிகள், நீதியாளர்கள் சிறுவர்களை பாதுகாக்க உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குற்றவாளிகள் தப்பித்து செல்ல அனுமதிக்க கூடாது. இன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும். பொதுவான சமூகப்பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் நின்று, மனிதர்கள் என்ற வகையில் கண்டிப்போம், தடுப்போம் என தெரிவித்துள்ளார்.