வாழைச்சேனை பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரம் பொலிஸாரின் சமிக்கைக்கு நிறுத்தாமல் சென்றமையால் பொலிஸார் டயருக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்..

வியாழக்கிழமை அதிகாலை ஓட்டமாவடி பாலத்தடியில் கடமையில் இருந்த பொலிஸார் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு சமிக்கை செய்தும் நிறுத்தாமல் சாரதி சென்றமையால் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்ற பொலிஸார் மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து டயருக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி சாரதியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக மண் ஏற்றி வந்த உழவு இயந்திரம் ஒன்றும் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ மேலும் தெரிவித்தார்.