அம்பிளாந்துறை கடெட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தேசிய மாணவர் படையணி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை(31) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் சு.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.குணபாலநாணயக்கார, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரதீப் ஜெயசூரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் பாட ஆலோசகர் ஆ.சிவனேசராசா, சிரேஸ்ட விரிவுரையாளர் மு.தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மாணவர் படையணியினால் கடந்த 2017.04.27ம் திகதியிலிருந்து, 2017.05.06ம் திகதி வரை நடாத்தப்பட்ட 10நாள் பயிற்சியில் கலந்து கொண்ட 25மாணவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கல்வி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.குணபாலநாணயக்கார, தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரதீப் ஜெயசூரிய ஆகியோர் வழங்கி வைத்தனர்.