போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பேரணி

(படுவான் பாலகன்) துர்நடத்தியினை ஒழிப்போம் முறையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் சர்வதேச புகைத்தல் போதை எதிர்ப்பு பேரணி இரண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினை  புதன்கிழமை(31) காலை சென்றடைந்தன.

கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரம்பமான ஓர் பேரணியும், அரசடித்தீவில் இருந்து ஆரம்பமான மற்றைய பேரணியுமே செயலகத்தினை வந்தடைந்தன.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும், குடியை விட்டு குடித்தனமாக வாழு, வாயில் சிக்கரட்டை எடுக்காதே போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர். குறித்த இருபேரணிகளிலும் அதிகளவாக பெண்களே பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரணியினை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், வாழ்வின் எழுச்சி மாவட்ட பணிப்பாளர் பூ.குணரெத்தினம் ஆகியோர் நிறைவு செய்து வைத்தனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம், சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு, சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு பிரிவு போன்றன இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.