கல்வி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் அம்பிளாந்துறை பாடசாலைக்கு விஜயம்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு கல்வி அமைச்சின், கல்வி அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.குணபாலநாணயக்கார  புதன்கிழமை(31) விஜயமொன்றினை மேற்கொண்டு பாடசாலையினை பார்வையிட்டார்.

குறித்த பாடசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கல்வி அமைச்சின் ஆலோசகர் பாடசாலையின் அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலையில் இடம்பெற்ற கற்றல்செயற்பாட்டினையும் அவதானித்தார்.
இதன் போது, பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பில் அதிபரினால் கூறப்பட்டதுடன், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூறிய அமைச்சின் ஆலோசகர் பாடசாலையின் குறைகள் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.


இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் பாட ஆலோசகர் ஆ.சிவனேசராசா, சிரேஸ்ட விரிவுரையாளர் மு.தயாநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.