வாழைச்சேனை மீன்பிடி துறைமுக தமிழ் மொழி ஊழியர்களுக்கு சகோதர மொழி பயிற்சி.

மட்டக்களப்பு வாழைச்சேனை இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான சிங்கள மொழி பயிற்சிக்கான  இறுதி நாள் நிகழ்வும் அதன் பாராட்டு வைபவமும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் துறைமுக முகாமையாளர் ரி சிவரூபன் தலைமையில் இன்று(31) நடைபெற்றது..

அரச கரும மொழிப் பாடத்திட்டத்திற்கு அமைய இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன தலைமை காரியாலயத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக ஊழியர்களுக்கு மே 22 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் நடைபெற்ற சிங்கள மொழி பயிற்சிகளை அடுத்து பரீட்சை வைக்கபட்டு சான்றிதழ் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தலைமை காரியாலய வளதாரிகளால் சிங்கள மொழி இலகுவான முறையில் கற்பிக்கப்பட்டதுடன் சிங்களத்தில் தொலைபேசியில் உரையாடுவது, பேசுவது, நாடகம் நடிப்பது, போன்ற முறைகளை பயன்படுத்தி பயிற்சிகள் நடைபெற்றது அதன் மூலம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக ஊழியர்கள் தமது தலைமை காரியாரியாலத்தில் சிங்கள மொழி மூலம் நடவடிக்கைகளை தாமாகவே நேரடியாக மேற்கொள்ளுவதற்கான வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.