மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்.

மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பாடசாலை மாணவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.பெரும்களேபரம் ஏற்பட்டுள்ளது.கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து அனுமதிக்கமுடியாது.

 
மாணவிகள் வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைத்தமிழர்ஆசிரியர் சங்கம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
.
 
 குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராயினும் சட்டத்தின் முன் எந்தவித பாரபட்சமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
 
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் நேற்று  விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் இணைந்து விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
 
சிவலோகநாதன்வித்யா என்ற மாணவியின் வன்புணர்வுப்படுகொலை வழக்கு இன்னும் நிறைவுற்றிருக்காதநிலையில் மூன்று மாணவிகள் இவ்வாறு வன்ணபுர்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதென்பது கண்டனத்திற்குரியது.
 
இவ்வாறான சம்பவங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் தொடர்ந்து நிகழ்வது பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.மக்களுக்க  பாடசாலைகளில் ஒருவித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் செயலாக இதனைப்பார்க்கவேண்எயுளள்து.
 
எனவே பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த வித பாரபட்சமும் இன்றி அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கைத்தமிழர்  ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.