மட்டக்களப்பில் மலசலகூடத்துக்குள் இறைச்சி கடை உரிமையாளர் பிணையில் விடுதலை.

மட்டக்களப்பு நகரில்  மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சியினை வெட்டி உணவினை சமைத்து மக்களுக்கு விற்பனை செய்த மட் பிரதானவீதியில் அமைந்துள்ள பிரபல சாப்பாட்டுக்கடை உரிமையாளர் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரதிணைக்கள காரியாலயத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொதுசுகாதாரப்பரிசோதகர் சோ. அமுதமாலன் தலைமையிலான நான்கு சுதாதரப்பரிசோதகர்கள்  செவ்வாய்க்கிழமை மாலை திடிர் சோதனைகளை மேற்கொண்டபோது மலசலகூடத்துக்குள்  வெட்டிய நிலையில் ஒரு தொகை இறைச்சியினை கைப்பற்றியுள்ளதுடன்,பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளன.;, அத்துடன் உணவு தயாரிப்பாளர்கள் சுகாதாரத்துக்கு ஏற்ற முறையில் இருக்கவில்லையென்ற குற்றசாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏழுமணியளவில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஐh முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து குறிப்பிட்ட கடை உரிமையாளரை 50ஆயிரம் ரொக்கப்பிணையிலும்,இரண்டு சரீரப்பிணையிலும்  நிதிபதியனால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கடைக்கு எதிர்வரும் 15ம் திகதிவரைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது..