கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்    பாரிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் இன்று ; (30) செவ்வாய்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்,  சீசீரி கமராவை இல்லாமல் செய், மஹாபொல பேசரி சரியான நேரத்தில் வழங்கு திருட்டு உடன்படிக்கையை இல்லாமல் செய்,  விடுதிப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு   பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர். அதனையடுத்து நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிசிரீவி கெமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை. மாணவர்களுக்கான பட்டப்படிப்பு உரிய காலத்திற்குள் நிறைவு செய்யப்படாமல் வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.