இரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்.

திருக்கோணமலை நகரில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையான தி/புனித மரியாள் பெண்கள் கல்லுாரியில் பணிபுரியும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரெருவர் 29/05/2017 நேற்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக அமைதியான போராட்டம்..

கடந்த 02 வருடங்களாகத் தனக்கு நேர அட்டவணை வழங்கப் படவில்லை எனவும் இவ்விடையம் சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் எடுத்துக் கூறியும் பலன் கிடைக்காமையினால் அமைதியான போராட்டத்தில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனக் கூறினார்..

திருக்கோணமலைக் கல்வி வலயத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப் பட்டதாரிகள் பற்றாக் குறையாகவே உள்ளனர் என்பது யாவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆனால் தி/மூ/சேனையூர் மத்திய கல்லுாரியில் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியா் ஒருவா் இல்லாத காரணத்தால் வஞ்ஞானப் பிரிவை மூடும் அபாய நிலை காணப் படுவது வேதனைக்குரியதே.

02 வருடமாகக் குறித்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டு வந்தசம்பளம் அரசநிதி மட்டுமல்ல மக்களுடைய வரிப் பணமும் ஆகும். மாகாண மட்டத்தில் செயற்பட்டு வரும் கணக்காய்வுக் குழு என்ன? செய்கிறது அரச நிதியை வீண்விரையம் செய்த சம்பந்தப் பட்ட அதிபர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இதே போன்று குறித்த பாடசாலையில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளில் காணப்படுகிது .

இன்று கிழக்கு மாகாணம் கல்வித் துறையில் சாதனை படைக்க முடியாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப்போக்கே காரணமாகும்.

இன்று திருக்கோணமலை கல்வி வலயத்தில் ஒரு ஆசிரியா் வெளிப்பட்டாா் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இனனும் எத்தனை ஆசிரியா்களோ?

Eastern Province Tamil Teachers