ஜனாவின் ஜி .கே . அறக்கட்டளை மன்றத்தின் இலவச அமரர் ஊர்தியினை செயல்படுத்தும் ஆரம்ப நிகழ்வு

கிழக்குமாகாணத்தில் உள்ள  கிராம மக்களின் நலன் கருதி  ஜி .கே . அறக்கட்டளை மன்றம் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பல சமூக  சேவைகளை முன்னெடுக்கும் நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை  மன்றத்தின் ஸ்தாபகரும் , தலைவருமான  கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

ஜி .கே . அறக்கட்டளை  மன்றத்தின்  இலவச அமரர் ஊர்தியினை  செயல்படுத்தும் ஆரம்ப  நிகழ்வும் , ஜி .கே .அறக்கட்டளை மன்றத்தின்  அங்குரார்ப்பன நிகழ்வு (29)  திங்கள்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது

இதன் முதல் கட்ட சமூக பணியாக  மட்டக்களப்பு .அம்பாறை , மூதூர்  ஆகிய பிரதேசங்களில் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  உடலங்களை இலவசமாக  அவர்களது வீடுகளுக்கு கொண்டுசெல்லும் அமரர் ஊர்தியினை  செயல்படுத்தும் ஆரம்ப  நிகழ்வு  இன்று நடைபெற்றது ..

.

ஜி .கே . அறக்கட்டளை  மன்றத்தின்  ஸ்தாபகரும் , தலைவரும் ,கிழக்குமாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில்  ஒய்வு நிலை கிழக்குமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்  தவராஜா  மற்றும்  ஜி .கே . அறக்கட்டளை  மன்றத்தின் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜி .கே . அறக்கட்டளை  மன்றத்தின் ஸ்தாபகரும் , தலைவருமான  கோவிந்தன் கருணாகரன் தெரிவிக்கையில் இந்த சமூக சேவை மன்றமானது  ஜி கே என்ற பெயரில் அரசசார்பற்ற மன்றமாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்த மன்றம் உருவாக்கிய நோக்கமானது கிழக்குமாகாணத்தில் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் , வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல் ,, அடிப்படை வசதி அற்ற மக்கள் மற்றும் கல்வி புலத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை ஊக்குவித்தல் போன்ற சமூகம் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்காக இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் உடனடி தேவையாக இன்று ஆரம்பிக்கப்பட்ட சேவையானது கிராமங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்து உயிரிழந்த உடலங்களை கொண்டு செல்ல வசதிகள் இன்றி  கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக அவர்களது வீட்டுக்கு கொண்டு செல்வதற்கா இந்த இலவச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

எனவே இந்த  மன்றத்தின்  சேவைகள் தொடர்பான விடயங்களையும்  மற்றும் இந்த இலவச சேவையினை  பெற்றுக்கொள்ளவும்  076 60 60 299  என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளவதோடு இலவச சேவையினையும் பெற்றுக்கொள்ள  முடியும் எனவும் தெரித்தார்.

Thanks

maddunews