மகிழடித்தீவில் தொற்றுநோய், மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் நீங்க விசேட பூசை வழிபாடு

(படுவான் பாலகன்) மே மற்றும் யூன் மாதங்களில் ஏற்படும் வரட்சியான காலநிலையினால் மக்களுக்கு பரவும் தொற்று நோய்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் மழையில்லாப் பிரச்சனைகள் மற்றும் நாட்டில் சாந்தி சமாதானம் நீடிக்க வேண்டிய வைகாசி பொங்கல் விசேட பூசை வழிபாடு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை(26) நடைபெற்றது.

மண்முனை தென்மேற்கு கலாசார அலுவல்கள் திணைக்களமும் பிரதேச செயலகமும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து குறித்த வைகாசி பொங்கல் விழாவினை நடத்தியிருந்தனர்.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற பூசை வழிபாடுகளில், செயலக உத்தியோகத்தர்கள் கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.