பணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஞா..ஸ்ரீநேசன்.பா.உ

அண்மைக் காலமாக எமது தாய்மார்கள் பிள்ளைகளை தமது தாய்மாரிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கிற்கு உழைப்பிற்காக செல்லுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இதனால் பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் இல்லாமல் அன்பு அவர்களுக்கு கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுகின்ற படியால், நாங்கள் பணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். எனவே, வறுமை இருந்தாலும், ஏழ்மை இருந்தாலும் பிள்ளைகளை கையோடு வைத்திருந்து தாய்ப்பாசத்தோடு வளர்த்தெடுக்கின்ற போது, அந்த குழந்தைகள் நல்ல பிரஜைகளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து .ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய, இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் அறநெறிப் பாடசாலைத் திறப்புவிழா 27.05.2017 மு.ப 10.00 மணியளவில் திரு.அரசரெட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதில் அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாகச் சிறப்புரை ஆற்றினார்.
தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் இந்த இடத்தில் உங்களுக்கு எங்களுடைய சுவாமிஜி அவர்கள் நல்லவற்றை பார்க்க வேண்டும். நல்லவற்றை கேட்க வேண்டும் நல்லவற்றை பேச வேண்டும் நல்லவை பற்றி சிந்திக்க வேண்டும் என்கின்ற ஒரு நல்ல சிந்தனையை விதைத்து சென்றிருக்கின்றார். அனேகமாக பார்க்கின்றவை நல்லவையாக இருந்தால் கேட்கின்றவை நல்லவையாக இருந்தால் பேசுகின்றவை நல்லவையாக இருந்தால் சிந்திப்பவை நல்லவையாக இருந்தால் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே தான் பார்க்கின்ற காட்சி நல்லவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், பேசுகின்ற பேசுக்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சிந்தனைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவருடைய ஆசியுரையினை உங்களுக்கு வழங்கியிருந்தார்.
இந்த சிந்தனைகள் சரியான முறையில் எமது மனதில் பதியுமாக இருந்தால் அதன் செயற்பாடுகளும் நன்றாக அமைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. அனேகமாக எங்களுக்கு தெரியும் இந்த இரும்புப் பொருட்களை எடுத்துக் கொண்டால் அந்த இரும்புப் பொருட்கள் அதன் புறப்பக்கமாக கரல்படிந்து காணப்படுவது போன்று, மனிதனின் அகப்பக்கமாக அழுக்காறு என்கின்ற அந்த கறல் படிவதனால் ஒருவர் செய்கின்ற  நல்ல செயல்களை பாராட்டுவதற்கு மனம் கிடைப்பதில்லை. ஒருவர் செய்கின்ற நல்ல காரியங்களை வாய் திறந்து பாராட்டுவதற்கோ, புகழ்வதற்கோ மனம் இடம்ப்பதில்லை நல்லவற்றை விட்டு, தவறானவற்றை மாத்திரம்; கூறுகின்ற சிந்தனை உடையவர்களாக பலர் இருக்கின்றார்கள்..
ஆகவே அவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இளம் பருவத்திலிருந்து இந்த பிஞ்சுகளுக்கு அறநெறியான ஒழுக்க விழுமியங்களை சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இந்த விளையும் பயிர்கள் நல்ல பிரஜைகளாக இந்த கிராமத்தில் மட்டுமல்ல, நாட்டிலும் அவர்கள் ஜொலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இளம் பராயத்திலே இந்த பிஞ்சுகளின் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும், நல்லவற்றை சிந்திக்க வைக்க வேண்டும், நல்லவற்றை பார்க்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறநெறி வகுப்பிற்கான தளத்தை நீங்கள் இட்டு வைத்திருக்கின்றீர்கள்.
இன்றைய கால கட்டத்தில் ஒழுக்க விழுமியங்கள்  ஒழுக்கப் பண்புகள் அருகிக் கொண்டு போவதாகவும் இதனால் வெறித்தனமான செயல்கள் வெறித்தனமான போக்குகள் நடந்து கொண்டிருப்பதையும் நாங்கள் அவதானிக்கின்றோம். அண்மையில் எமது நாட்டில் ஒரு மதகுரு இன்னுமொரு இனத்திற்கு எதிராக மிக மோசமாக குரோத உணர்வினை பரப்பக் கூடிய விதத்தில் செயற்பட்டதனால் எமது நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை காண்கின்றோம். இன்று அந்த மதகுரு தலைமறைவாக ஒளித்திருக்கின்றார் அப்படியில்லாமல், நல்ல மதகுருமார்கள் நல்லவற்றைப் பேசுவார்கள், நல்லவற்றைச் செய்வார்கள் நல்லவற்றைச் சிந்திக்க வைப்பார்கள் என்ற அடிப்படையில் சுவாமிஜி பிரபானந்தா மகாராஜ் அவர்கள் உங்களுக்கு நல்ல ஆசீர்வாதங்களை தந்திருக்கின்றார் நல்ல கருத்துக்களை பரிமாறி இருக்கின்றார்.
எனவே, விளையும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள். அந்த விளைகின்ற பயிர்களான முளைகளை உரப்படுத்தி நல்ல சிந்தனையாளர்களாக, நாட்டுக்கு உதவக்கூடியவர்களாக நல்லவற்றை பேசக்கூடியவர்களாக, நல்ல மனிதர்களாக நாங்கள் உருவாக்கியெடுக்க வேண்டும் “எந்தக் குழந்தையம் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற ஒரு பாடல் இருக்கின்றது. ஏனேன்றால் தாய் சரியாக இருந்தால், பிள்ளைகள் சரியாக வளர்வர் நல்ல நெறியில் செயற்படுவர் என்ற கருத்தும் இருக்கின்றது. அண்மைக் காலமாக எமது தாய்மார்கள் பிள்ளைகளை தமது தாய்மாரிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கிற்கு உழைப்பிற்காக செல்லுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
இதனால் பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் இல்லாமல் அன்பு அவர்களுக்கு கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுகின்ற படியால், நாங்கள் பணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். எனவே, வறுமை இருந்தாலும், ஏழ்மை இருந்தாலும் பிள்ளைகளை கையோடு வைத்திருந்து தாய்ப்பாசத்தோடு வளர்த்தெடுக்கின்ற போது, அந்த குழந்தைகள் நல்ல பிரஜைகளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
ஒரு உளவியல் ஆய்வில் கூட இரண்டு விதமான சமூகங்களைப் பார்க்கின்றார்கள் .மொண்டுகுமோர் சமூகம் என்றும் அபரேஸ் சமூகம் என்றும் காணப்பட்;ட இரு சமூகங்களால் அன்பால்; வளர்க்கப்பட்ட சமூகம் என்றும், இன்னுமொரு  சமூகம் அடாவடித்தனத்தினால் வளர்க்கப்பட்ட சமூகம் என்றும் காணப்பட்டன. இந்த அன்பால் வளர்க்கப்பட்ட சமூகம் நல்ல பிரஜைகளாக வந்ததையும், அடக்குமறையால் வளர்க்கப்பட்ட சமூகங்கள் தீய வழியில் சென்றதையும் ஆய்வாளர்கள் சொல்லிருக்கின்றார்கள் என்றார்.