இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146

இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது..

காணாமல் போனோரின் எண்ணிக்கை 112 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 299 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

319 நலன்புரி முகாம்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 638 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்