ஏறாவூர் பொலிஸ்பிரிவில் ஆண் சிசு ஒன்று மீட்பு…

Mohamed Asmy

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றின் பின்னால் இருந்து நேற்று பிற்பகல் ஆண் சிசு ஒன்று மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..
குறித்த சம்பவம் தொடர்பி்ல் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஏறாவூர் சர்வோதயா வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கு பின்புறமாக இருந்து தொடர்ச்சியாக குழந்தை ஒன்று அழுகின்ற ஓசை கேட்டுக் கொண்டிருந்ததை தொடர்ந்து பின்னால் அவதானித்த போது அங்கு பிரசவிக்கப்பட்ட நிலையிலே ஆண் சிசு ஒன்று வீசப்பட்டு கிடப்பதை அடுத்து துரிதமாக செயற்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக சிசுவை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசாருக்கும் தெரியப்படுத்தியதாகவும் குழந்தையின் தாய் யார்? குழந்தை எவ்வாறு இவ்விடத்தில் போடப்பட்டது என்பது தமக்கு மர்மமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும் , மேலதிக பராமரிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளின் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை பராமரிப்பு பிரிவிற்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.