மூதுார் கிழக்கு பழங்குடி மக்கள் தமது பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி ஆர்பாட்டமொன்றை ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதுார் கிழக்கு பழங்குடி மக்கள் தமது பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி  ஆர்பாட்டமொன்றை  ஞாயிற்றுக்கிழமை  மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீரமாநகரில் நடாத்தவுள்ளதாக  அறிவித்துள்ளனர்..

இதற்கான ஏற்பாட்டை மூதுார் கிழக்கு பழக்குடி மக்களின் அமைப்பு ஏற்பாடுசெய்துள்ளதாக அதன் தலைவர் கே.கனகசிங்கம் தெரிவித்தார்.

பாட்டாளிபுரத்தில் படையினர் வைத்துள்ள காணிகளை விடுவிக்க கோரல், பாட்டாளிபுரம்,வீரமாநகர்,நல்லுாரி,சந்தோசபுரம்,போன்ற தமது மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள மக்களின் வறுமைக்கான சமூர்த்தி மறுக்கப்பட்டுவருவதனைக்கண்டித்தும் அவற்றை வழங்ககோரியும் அதனால் கிடைக்கும் அனுகூலங்களை வறுமையான மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும்  நல்லுார் கிராமத்தில் தமது மக்களின் வயல் மற்றும் குடியிருப்பு காணிகள் சுமார் 1200எக்கரை அத்துமீறிப்பிடித்திருப்பது பற்றி அரசாங்கம் தீர்க்க மான முடிவை எடுத்து எமது மக்களின் காணிகள் வழங்கப்பட வேண்டும் என பலகோரிக்கைளை முன்வைத்து இவ்வார்பாட்டம் நடாத்தப்பட வுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமங்களில் வாழும் பழங்குடி மக்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள் என்பதுடன் வாழ்வாதாரங்கள் இன்றி சிரமப்படுவபவர்கள் என்பதுடன்  2006 ஒகஸ்டில் முற்றாக இடம்பெயர்ந்து மீழ்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் முறையான உதவி நடவடிக்கைள் பூரணப்படுத்தப்படாமல் உள்ள பகுதி என்பதனால் மக்கள் பெரும் துயரப்படவதாகவும் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.