நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது..

வெள்ளம் மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்ட  இலங்கை  மக்­க­ளுக்கு உதவி வழங்க இந்­தியா முன் வந்­துள்­ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க முன்­வ­ரு­மாறு இலங்கை அர­சாங்கம் கேட்­டுக்­கொண்­டதை உட­ன­டி­யாக இந்­திய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.

அதன் படி நிவா­ரணப் பொருட்­க­ளு­ட­னான இரு இந்­தியக் கப்­பல்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டிருந்தது.

சீரற்ற கால­நி­லை­யி னால் நாட்டில் ஏற்­பட்ட  அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 100 ஆக உயர்­வ­டைந்­தி­ருந்துள்ளது