சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு : மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை

முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு, அவரிடம் மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை, வடமாகாண சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றபோது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், இவ்விசேட பிரேரணையைக் கொண்டுவந்தார்.

அதில், ‘கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருக்கையில், இடையில் குறுக்கிட்டு அவரின் உரையைத் தடுக்கும் வகையிhன கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து நாம் நாம் மனவருத்தம் அடைவதுடன், அவரிடம் மன்னிப்புக் கோருகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.