முன்னர் புலனாய்வாளர்கள், தற்போது மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்.

(பழுகாமம் நிருபர்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டங்கள் நடாத்தினால் புலனாய்வு துறையினர் புகைப்படம் எடுப்பது வழமை ஆனால் இங்கே மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் மற்றும் அவரது வழிகாட்டலில் இன்னுமொரு உத்தியோகஸ்தர் இந்த கூட்டத்தை புகைப்படம் எடுத்த வண்ணம் உள்ளனர். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டார்.
கடந்தகால அபிவிருத்தி குழு கூட்டங்களில் நாங்கள் மதுபானச்சாலையை மூடுவதற்காக கலந்துரையாடுகின்ற போது அதிகாரிகள் எதைக் கூறுகின்றார்கள் என்றால் அரசாங்கத்திற்கு வரி வேண்டுமாம். அதிக வரியை அரசாங்கத்திற்கு ஈட்டிக்கொடுப்பது இந்த மதுபானசாலைகள் என்பதை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்திற்கு வரி வேண்டுமென்றால் மக்களை துன்புறுத்தி, கொன்றொழித்து மக்களுக்கு தேவையான அபிவிருத்தி வேலைகளை செய்வதுதான் இந்த அரசாங்கத்தின் தொழிற்பாடா? என்பதை இந்த அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மதுபானசாலைகள் கொண்டுவரப்படுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த கூட்ங்களிலே மக்கள்பிரதிநிதிகளாகிய நாங்கள் ஏகமனதாக முடிவெடுத்திருக்கின்றோம். அவ்வாறு நிறத்தப்படவில்லையாயின் வெகுஜனப்போராட்டம் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்
கடந்தகாலங்களில் பட்டிருப்பு தெபகுதியில் ஒரேயொரு மதுபானச்சாலை மட்டுமே இருந்தது. அனால் இன்று ஆறிற்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் உள்ளன. எதிர்வரும் காலங்களில் கிராமத்திற்கு ஒன்று என்கின்ற வீதத்தில் மதுபானசாலைகள் நிர்மாணிக்கப்படும் ஆகவே இவற்றை நாங்கள் தடுத்தேயாக வேண்டும். எனவும் மேலும் கூறினார்.