பட்டிப்பளை பிரதேசத்திற்கு ஆறு வேலைத்திட்டங்கள், இரண்டு வேலைத்திட்டம் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு.

படுவான் பாலகன்) யூத் வித் ட்ரலண்ட், ஊருக்கொரு கோடி துறுணு சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் பிரதேச இளைஞர் கழங்களின் பங்களிப்புடன் இன்று(24) புதன்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடுக்காமுனை கிராமத்தில் மைதான அரங்கிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும், படையாண்டவெளி ஆலயத்திற்கான தீர்த்தக்குள அமைப்பு வேலைத்திட்டங்களுமே வைபவ ரீதியாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஆறு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.தயாசீலன் தெரிவித்தார். கடுக்காமுனை, முனைக்காடு, படையாண்டவெளி, மகிழடித்தீவு, கெவிளியாமடு, கற்சேனை போன்ற கிராமங்களே இத்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வேலைத்திட்டத்தினை அக்கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்களே முன்னெடுப்பதாகவும் மேலும் கூறினார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு வேலைத்திட்டங்களுக்கும், ஒரு வேலைத்திட்டத்திற்கு ரூபா 150000ஐ வீதம் நிதியயொதுக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தினை நேர்த்தியாகவும், மேலதிகமாகவும், குறித்த காலப்பகுதிக்குள் செய்து முடிக்கும் இளைஞர் கழகங்களில் மாவட்டத்தில் முதலிடத்தினை பெறும் கழகத்திற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் ரூபாய் பணமும், தேசிய ரீதியில் தெரிவு செய்யப்படும் கழகங்களுக்கு 1கோடி ரூபா பணமும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.